1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கர்நாடகா மாநிலத்தில், இன்று முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் செல்ஃபி எடுத்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என அந்த மாநில அரசாங்கம் உத்தர விட்டுள்ளது.

ஜி.பி.எஸ் மூலம் நேரத்தையும் இருப்பிடத்தையும் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செயலியை தங்கள் மொபையில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

வறுமையில் இருந்து மீள முடியாத நிலை

உலகும் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்றால் சர்வதேச பொருளாதாராம் பாதிக்கப்படும் என பரவலாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் கிழக்கு ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்தியங்களில் வறுமை நிலையில் வாழும் 2.4 கோடி மக்கள் தங்கள் வறுமையில் இருந்து மீள முடியாத நிலை ஏற்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது நிலவும் இந்த மோசமான சூழ்நிலையில், சீனாவில் உள்ள 2.5 கோடி மக்கள் உட்பட 3.5 கோடி மக்கள் வறுமையிலேயே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.

அதாவது ஒரு நாளுக்கு 5.5 டாலர்கள் (சுமார் 390 இந்திய ரூபாய்) அல்லது அதற்கும் குறைவான வருவாயில் வாழ்பவர்களை வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுபவர்களாக உலக வங்கி குறிக்கிறது.

வளர்ந்து வரும் கிழக்கு ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2.1% ஆக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

ஜப்பானில் விரைவில் பயணத் தடை

ஜப்பானில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு அமெரிக்கா, சீனா, கனடா, தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 73 நாடுகளின் பட்டியல் ஒன்றை தயாரித்து அந்த நாடுகளுக்கு ஜப்பானியர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா?

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (Limited Community transmission) என்ற நிலையை அடைந்துவிட்டது என்கிறார் கொரோனா வைரஸ் குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ள பவித்ரா வேங்கடகோபாலன்.

கொரோனா வைரஸ் குடும்பம் குறித்து ஆய்வு செய்து, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் பவித்ரா. சென்னையைச் சேர்ந்த பவித்ரா, கொரோனா வைரஸ் குறித்து உலகளவில் நடைபெறும் ஆராய்ச்சி தகவலைகளை கவனித்து வருபவர்.

பேட்டியிலிருந்து: கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா?

அதிபர் டிரம்ப் உறுதி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதன் எண்ணிக்கை அதிகரித்து உச்சத்தை தொடும் நேரத்தில் தங்களிடம் தேவையான வென்டிலேட்டர்கள் இருக்கும், நல்ல முறையில் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் 10 அமெரிக்க நிறுவனங்கள் மருத்துவ கருவிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கும் அந்த கருவிகள் மருத்துவமனைகளுக்கு வந்தடையும் என்றும் அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் என்னென்ன கட்டுப்பாடுகள்?

உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம், எண்ணெய் வளம் அதிகமுள்ள வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில் அதிக அளவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை செய்து வருவதால், அந்த நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி உள்ளது? என்பதை அறிந்து கொள்ள மக்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

கொரோனா வைரஸ்: வளைகுடா நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

பிரிட்டனில் பலன் தரும் ஊரடங்கு நிலை

பிரிட்டனின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ், ''மக்கள் வீட்டிலேயே இருப்பதால் கொரோனா தொற்று பரவுவதன் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மக்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் தனித்து இருப்பது கொரோனா தாக்கத்தை குறைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பிரிட்டனின் மருத்துவமனைகளில் 9000 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடத்த வெள்ளிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 6000மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் ஈஸ்டர் ஞாயிறு வரை முடக்கம்

இத்தாலியை ஈஸ்டர் தினம் வரை முடக்குவதாக அந்நாடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே சமயம் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என இத்தாலி அறிவித்துள்ளது.

அங்கு கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சமீபத்திய எண்ணிக்கை 1,01,000 கடந்துள்ளது.

இத்தாலியில் திங்கள் கிழமை அன்று புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1648ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,815 ஆக இருந்தது.

எனவே புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றே கூறலாம்.

ஆனால் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காண முடிகிறது. சமீபத்தில் 756ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அடுத்த நாளே 812ஆக அதிகரித்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி