1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

Covid 19 வைரஸ் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக முழு இலங்கையையும் LOCKDOWN செய்வது சம்பந்தமாக சமூகஊடகங்களில் வரும் செய்திகள் முற்று முழுதான பொய் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இப்படியான செய்திகளை வெளியிடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 10ம் திகதியிலிருந்து 15ம் திகதி வரை முழு நாட்டையும் LOCKDOWN  செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோன வைரஸ் தொற்றி இறப்பவர்களின் இறுதிச் சடங்கு செய்வது சம்பந்தமான விடயம் இப்பொழுது இனவாதமாக மாறியுள்ளது பொது மக்கள் அனைவரும் இதனை கவனத்திற் கொண்டு இனவாத கருத்துக்கள் பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் என பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி