1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி மக்களை சிரமப்படுத்துவதாக ஐக்கிய அரபு  ராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை இலங்கை ஊடகங்கள் தோற்கடிக்க வேண்டும் என இலங்கையின் அரச உயர் அதிகாரிகளை ஐக்கிய அரபு ராஜ்ஜியம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடலை சாஜா பிரதேசத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல பணிக்கப்பட்டுள்ளததாக இலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

எங்களது நாட்டில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வதில் எந்த குறைகளும் இடம்பெறவில்லை என்று ஐக்கிய அரபு  ராஜ்ஜியத்தின் இல ங்ககைக்கான உயர்ஸ்தானிகர் இன்று 6 வெளியிட்டுள்ள அவரது உத்தியோக பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சாஜாவில் அவர்கள் அப்படி செய்துள்ளார்கள் இலங்கையிலும் நாம் அப்படி செய்ய வேண்டும் என்று கூறி முஸ்லிம்கள் மீது இனவாதத்தினை பரப்பி செ யற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி