1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொரோனா வைரஸ் காரணமாக வெலிசர கடற்படை முகாம் மற்றும் சீதுவ சிறப்புப் படை முகாம் மூடப்பட்டிருப்பதை அரசாங்கம் அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், விமான படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக கூறி கட்டுநாயக்க விமானப்படை தளம் மூடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானப்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் துஷன் விஜேசிங்க 'நெத் வானொலியில், விமானப்படை அதிகாரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விமானி அங்கொடா உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த விமானப்படை  உ றுப்பினர் ஒரு விமானப்படை இசைக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ தளங்களை மூடப்படுகிறது!

கொரோனா தொற்றுநோயை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் இராணுவ தளங்களை மூடுவதற்கு காரணமான உலகின் ஓரே ஒரு தலைவராக கோத்தபாய ராஜபக்ஷ மட்டுமே இருப்பதாக சமூக ஊடகங்கள் கூறியுள்ளன.

சமூக ஊடகங்கள் அவரை விமர்சித்து வருகின்றன. இந்த நடவடிக்கையால் பாதுகாப்புப் படையினர் ஆபத்தில் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி