1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு

ஏற்கனவே 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இன்னும்  ஐவர் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அளுத்கமவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் "இயலும்  ஸ்ரீலங்கா" யோசனைக்கு வலுவூட்டும் நோக்கில் பேருவளை இளைஞர் மாநாடு நேற்று (18)  அளுத்கம பிரதேசத்தில் கூடியது.
 
அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார,
 
'சமகி ஜனபல வேகய' என்றால் சமநிலையான குழு என்று அர்த்தம். வில்பத்தை வெட்டிய ரிஷாத் பதியுதீன் இருக்கிறார். வில்பத்து வெட்டுவதை எதிர்த்த மொட்டு எம்.பி.க்களும் இருக்கிறார்கள். பத்திரப்பதிவு மோசடிக்கு புத்தகம் எழுதிய சுஜீவ சேனசிங்கவும் இருக்கிறார். அப்போது கத்திய டலசும் இருக்கிறார்.
   
"இன்றைய நிலவரப்படி ஐக்கிய மக்கள் சக்தியின் 14 எம்.பி.க்கள் வெளியேறி விட்டனர். இன்னும் சில நாட்களில்  நாலைந்து பேர் வெளியேறி விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி