1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு

ஆதரவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (20) கொழும்பில் இடம்பெற்றது.

புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
புதிய கூட்டணியின் நிர்வாகிகள், நிர்வாக சபை மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகளை ஈடுபடுத்துவது குறித்து இதன்போது  நீண்ட விவாதம் இடம்பெற்றது.
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
புதிய அரசியல் கட்சிக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 
எதிர்காலத்தில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சிக்கான அரசியலமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், எதிர்காலத்தில் அந்த அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி