1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின்

இரத்தினபுரி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தலதா யஅத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் அறிவித்த போதிலும் நேற்று கூட சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாததன் காரணமாக அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் சிக்கலாகியுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர  கூறுகையில், ​​தலதா அத்துகோரள தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்காத காரணத்தினால் குறித்த வெற்றிடத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியாதுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தலதா அதுகோரள இராஜினாமா செய்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலதா அத்துகோரளவுக்கு அடுத்தபடியாக அந்த மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றவர் பரணவிதான.

கடந்த பொதுத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 36,787 ஆகும்

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி