1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிளப் வசந்த என்றழைக்கப்படும்

சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட இருவர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர்கள் மூவரும் தெஹிவளை கவுடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கிளப் வசந்த கொல்லப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கேபிஐ என அடையாளம் காணப்பட்ட தோட்டாக்கள் போன்றே சந்தேக நபர்களிடம் இருந்து 12 உயிருள்ள தோட்டாக்கள்  கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
கொலைச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும், இலங்கையிலிருந்து கொலைக்கு தலைமை தாங்கிய இருவரையும் பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை என்பதுடன் அவர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரினர்.
 
இவ்வாறானதொரு பின்னணியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன தலைமையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் கிளப் வசந்தவைக் கொல்ல வந்த துப்பாக்கிச் சூடு நடத்திய சண்டி என்ற அஜித் ரோஹனவும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
அவர் 31 வயதான அஹுங்கல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் 14 ஆவது சிங்கப் படைப்பிரிவில் கடமையாற்றிய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.
 
இவர் இதற்கு முன்னரும் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதுடன், அத்துருகிரிய பிரதேசத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வீடு ஒன்றை வாடகைக்கு கொடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பஸ்ஸில் கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்றவர் என கூறப்படும் வருண இந்திக்க சில்வா எனப்படும் சங்கா என்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அவர் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேலும், சந்தேக நபர்கள் இருவருக்கு தெஹிவளை  கவுடான பிரதேசத்தில் தங்குமிடத்தை வழங்கிய 40 வயதுடைய மொஹமட் இக்பால் மொஹமட் இம்ரான்  என்பவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி