1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முஸ்லிம் ச‌ம‌ய‌, க‌லாசார‌

விவ‌கார‌த்துக்கான‌ இராஜாங்க‌ அமைச்சு ஒன்றை உருவாக்குவோம் என‌ அகில இலங்கை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவை ச‌ந்தித்த‌போது ச‌ஜித் பிரேம‌தாச‌ கூறியுள்ளதை ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வ‌ர‌வேற்றுள்ள‌து.

முஸ்லிம் ச‌ம‌ய‌ விவ‌கார‌த்துக்கென‌ நீண்ட‌ கால‌மாக‌ அமைச்சு இருந்த‌து. இத‌ன் அமைச்ச‌ராக‌ இருந்த‌ அஸ்வ‌ர் ஹாஜி இத‌ன் மூல‌ம் ப‌ல‌ சேவைக‌ளை  செய்தார். பின்ன‌ர் ம‌ஹிந்த‌ ஆட்சியில் இது இல்லாதொழிக்க‌ப்ப‌ட்ட‌து.

இந்த‌ வ‌கையில் தான் ஆட்சிக்கு வ‌ந்தால் முஸ்லிம் ச‌ம‌ய‌ விவ‌கார‌த்துக்கென‌ ராஜாங்க‌ அமைச்சை ஏற்ப‌டுத்துவ‌தாக‌ ச‌ஜித் பிரேம‌தாச‌ கூறியிருப்ப‌து ந‌ல்ல‌தொரு விட‌ய‌மாகும். அதே போல் இந்த‌ அமைச்சின் மூல‌ம் ப‌ள்ளிவாய‌ல்க‌ளில் ப‌ணி புரியும் இமாம், முஅத்தின்க‌ளுக்கு அர‌ச‌ ச‌ம்ப‌ள‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையையும் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் முன் வைக்கிற‌து என ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தலைவர் முன்னஸ் முபாறக் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி