1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ்

எல்லைக்குள் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே தலா 1500 ரூபா அபராதம் விதித்தார்.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த விஜேரத்ன மற்றும் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த எல்பர்ட் என்ற இருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டும்போது ரோந்து பொலிஸ் குழுவினால் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

தேர்தல் விதிகளின்படி அங்கீகரிக்கப்படாத இடங்களில் அரசியல் விளம்பர பலகைகள், சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான், பிரதிவாதிகளுக்கு தலா 1,500 ரூபா  அபராதம் விதித்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி