1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்

சஜித் பிரேமதாசவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்த கருத்து சரியானது. அது நாட்டுக்கானது.

அது சிறந்த நடவடிக்கை எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைக்குமாறும் நான் முயற்சித்தேன்.

ஆனால் சஜித் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தலதா சிறந்த யோசனையை முன்வைத்தார் என்று நான் கூற வேண்டும்” எனவும் பாராளுமன்ற உறுப்பினர்  ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச வெற்றியீட்ட முடியும் என இன்னமும் நம்புகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளத் தயங்குவதால் கட்சியின் நிலை குறித்து ஏமாற்றமடைந்துள்ள ஐக்கிய  மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருப்பதாகவும்  ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் ரணிலுடன் இணைய காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தீவிரமடையும்போது அவர்கள் அவ்வாறு செய்வார்கள்” என்று அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி