1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தெனியாய கல்வி வலயத்துக்கு

உட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் இன்று (30)  குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
70 மாணவர்கள் தற்போது ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஏனைய மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
 
பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் பாடசாலைக்கு அருகில் உள்ள மரத்தில் குளவி கூட்டைக் கலைத்து தாக்கியுள்ளனர். 
 
இதன்போது பாடசாலயில்இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடியாக பிள்ளைகளை பாதுகாப்பான வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, கணினி பிரிவுக்கு அனுப்பிவிட்டு வெளியே நெருப்பு மூட்டி குளவிகளை விரட்டினர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி