1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை வந்த இந்தியா

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதிப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாடத் பதியுதீன் மற்றும் அமிர் அலியும் பங்கு பற்றினாரகள்.
 
இந்தச் சந்திப்பின்போது தங்களுடைய இரு கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு எடுத்த பின்னணியில் இலங்கையில் முக்கியமாக வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் 90 சத வீதமான முஸ்லிம் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாசாக்கு வாக்களிப்பார்கள் என்ற விடயத்தை தெரிவித்தார்கள். 
 
Nizam kariyappar 087
 
தற்போதைய பிரசாரக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் மக்கள் நிறைந்து காணப்பட்டதையும் அவரிடம் எடுத்துக் கூறினார்கள்.
 
மேலும் எதிர்காலத்தில் புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாஸவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புகள் வைகிப்போம் என்றும் ஆகவே புதிய அரசாங்கத்தின் வெளிவிவாகர கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என்றும் உத்தரவாதம் வழங்கப்பட்டது. 
 
ஆகவே இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் பொருளாதார விடயங்கள் உட்பட சிறுபான்மையினரின் உரிமை சம்பந்தமான விடயங்களிலும் அவர்களுடைய பங்களிப்பு இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறினார்கள். 
 
இந்த விடங்கள் தொடர்பில் இந்தியாவும் சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி