1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரச சேவையின் அடிப்படை

சம்பளத்தை 2025 ஜனவரி முதல் 24% இலிருந்து 50% ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மூன்றாம் தர அலுவலக உதவி சேவையின் சம்பளம் 5,450 ரூபாவாலும், இரண்டாம் தரத்திற்கு 8,760 ரூபாவாலும், முதலாம் தரத்திற்கு 10,950 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சேவையின் சிறப்பு தர சம்பளம் 13,980 ரூபாவால் உயரும்.

சாரதி சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளத்தை 6,960 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாரதி சேவையின் இரண்டாம் தர சம்பளம் 9,990 ரூபாவினாலும், முதலாம் தர சம்பளம் 13,020 ரூபாவினாலும், விசேட தர சம்பளம் 16,340 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இன் சம்பளம் 8340 ரூபாவினாலும், இரண்டாம் தரத்திற்கு 11,690 ரூபாவினாலும், தரம் Iக்கு 15,685 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

மூன்றாம் தரத்தில் உள்ள முகாமைத்துவ சேவை அதிகாரி/ முகாமைத்துவ உதவியாளரின் சம்பளம் 10,140 ரூபாவினாலும், இரண்டாம் தரத்திற்கு 13,490 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூன்றாம் தரத்திற்கு 12,710 ரூபா சம்பள அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு 17,820 ரூபா சம்பள அதிகரிப்பும், முதலாம் தரத்திற்கு 25,150 ரூபா சம்பள அதிகரிப்பும் கிடைக்கும்.

மூன்றாம் தரத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர்களுக்கு 12,885 ரூபாவும், இரண்டாம் தரம் 17,945 ரூபாவாலும், முதலாம் தரம் 25,275 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.

ரேடியலஜிஸ்ட் மற்றும் பார்மசிஸ்ட் தரம் III சம்பள உயர்வு ரூ.13,280 ஆக இருக்கும். இரண்டாம் தரத்திற்கு 18,310 ரூபாவும், முதலாம் தரத்திற்கு 25,720 ரூபாயும் சம்பள உயர்வு வழங்கப்படும்.

அத்துடன் மூன்றாம் தர தாதி உத்தியோகத்தரின் சம்பளத்தை 13,725 ரூபாவினால் அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டாம் தரத்திற்கு 18,835 ரூபா சம்பள அதிகரிப்பும், முதலாம் தரத்திற்கு 26,165 ரூபா சம்பள அதிகரிப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தினரின் சம்பளத்தை 23,425 ரூபாவினாலும், இரண்டாம் தரத்தினரின் சம்பளத்தை 29,935 ரூபாவினாலும், மூன்றாம் தரத்திற்கு 39,595 ரூபாவினாலும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆசிரியர் சேவையில் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு 17,480 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 19,055 ரூபாயும், இரண்டாம் தரத்திற்கு 20,425 ரூபாயும், முதலாம் தரத்திற்கு 38,020 ரூபாயும் சம்பள உயர்வு வழங்கப்படும்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சம்பளம் 10,740 ரூபாவினாலும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சம்பளம் 13,210 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் சப்-இன்ஸ்பெக்டர்களின் சம்பளம் 14,050 ரூபாவாலும், பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் 18,290 ரூபாவாலும் உயரும்.

மேலும், தலைமைக்  பொலிஸ் ஆய்வாளர் ஒருவரின் சம்பளம் 23,685 ரூபாவால் அதிகரிக்கப் போகிறது.

இதே சேவையின் முதலாம் தர கிராம உத்தியோகத்தருக்கு 11,340 ரூபாவும், இரண்டாம் தரத்திற்கு 14,690 ரூபாவும், முதலாம் தரத்திற்கு 18,750 ரூபாவும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு நிர்வாக கிராம அதிகாரியின் சம்பளமும் 23,575 ரூபாவால் உயரும்.

உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 28,885 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது.

பிரதி பணிப்பாளர் மற்றும் பிரதி ஆணையாளர்களின் ஆரம்ப சம்பளம் 43,865 ரூபாவினாலும், பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகியோரின் சம்பளம் 57,545 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆரம்ப தர வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினாலும் இரண்டாம் தர வைத்தியர்களின் சம்பளம் 39,575 ரூபாவினாலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாம் தர வைத்தியர்களுக்கு 53,075 ரூபாவும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்தியர் பதவிகளுக்கு 70,200 ரூபாவும் சம்பள உயர்வு அதிகரிக்கப்பட உள்ளது.

இதனுடன், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அனைத்து சம்பள உயர்வு மதிப்புகளையும் இரட்டிப்பாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் சட்டபூர்வ நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆயுதப்படைகளின் சம்பளத்தை 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி