1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கட்டுநாயக்க விமான நிலைய

வரலாற்றில் முதல் தடவையாக, விமானத்தின் வர்த்தக வகுப்பு வசதிகளைப் பயன்படுத்தி போலி கடவுச்சீட்டுடன் பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவரை குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு 6.50க்கு டோஹாவுக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-217 இல், கட்டுநாயக்க விமான நிலைய "சேத மாவத்தை" (Silk Route) இல் உள்ள வணிக வகுப்பு வசதிகளுடன் கூடிய சிறப்பு முனையத்துக்கு  அவர் 60 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார் நுழைந்தது.

அங்கு குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகள் பயணிகளை பரிசோதித்து அனுமதித்தனர்.

இதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இளைஞனின் கடவுச்சீட்டை சோதனை செய்தபோது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில்  கட்டுப்பாட்டு பிரிவுக்கு அழைத்துச் சென்று அங்கு  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்த அதிகாரிகள் மேற்கொண்ட தொழில்நுட்ப சோதனையின்போது அவரது புகைப்படத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இலங்கை கடவுச்சீட்டில் பதிவாகியிருந்த உண்மைகள் மற்றுமொரு நபரின் விபரங்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

சந்தேக நபரின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, ​​போலியான இத்தாலிய கடவுச்சீட்டு மற்றும் போலியான தகவல்களுடன் கூடிய பிரெஞ்சு வதிவிட விசாவையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விசாவில் அவர் இதற்கு முன்னர் பிரான்ஸில் வசித்த தகவல் உள்ளடங்கிய போதிலும், அவர் பிரான்சுக்கு சென்றதில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் சந்தேகத்துக்குரிய இளைஞரின் பயணப் பொதியின் இத்தாலிய கடவுச்சீட்டில் மாலைதீவு, இத்தாலி மற்றும் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களங்களின் பல போலி முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்தப் போலி முத்திரைகளில், இலங்கை குடிவரவுத் திணைக்களத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முத்திரைகளைப் பயன்படுத்திய அவர், அவற்றை அறிமுகப்படுத்தியதற்கு முந்தைய நாள் தனது கடவுச்சீட்டில் பயன்படுத்தியுள்ளார்.

இதன்படி, கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சந்தேகநபர் இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேசத்தை வசிப்பிடமாகவும், தனியார் நிதி நிறுவனமொன்றில் கள உத்தியோகத்தராக கடமையாற்றிய 36 வயதுடையவராவார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி