1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும்

மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து திஹாரியில் இடம்பெறும் மக்கள் பேரணியில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்;
 
“..அன்று நோலிமிட் எரிந்தது, திகன, அளுத்கம எரிக்கப்பட்டன. அப்போதும் இப்போதும் ஏன், அன்று ஈஸ்டர் தாக்குதலில் பலர் கைதானார்கள் அப்போதும் நாம் ஓடி ஓடி உங்களுக்காக பாடுபட்டோம். நன்றி மறக்காதீர்கள் அப்போது இரவு பகல் பாராமல் நாம் உங்களுக்காக இருந்தோம். வாக்குக் கேளுங்கள் ஆனால் எங்களை ஏசி வாக்குக் கேட்காதீர்கள். நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என பொய் சொல்லி வாக்குக் கேட்காதீர்கள். 
 
நீங்கள் தேசியப் பட்டியல் எம்பி பெறுவதற்காக இந்த சமுதாயத்தை ஏமாற்றி பொய் சொல்லி வாக்குக் கேட்காதீர்கள். நாங்கள் குற்றம் செய்தா சிறைக்குப் போனோம்? ஈஸ்டர்குண்டுத் தாக்குதலுக்கும் எமக்கும் என்ன தொடர்பு? அன்று நாம் குரல் கொடுத்தோம்? பாராளுமன்றில் கொதித்தெழுந்தோம்.. நான் மட்டுமா தண்டிக்கப்பட்டேன்? எனது மனைவி, மாமா, மச்சான், எனது தம்பி என்று தண்டிக்கப்படோம்.. எமது சமூகமே, தமிழ் சமூகமே, மலையக சமூகமே சிங்கள சமூகமே சஜித் பிரேமதாசவுக்காக வீடு வீடாகச் செல்லுங்கள் சஜித்திற்காக உழையுங்கள், வாக்களியுங்கள் என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி