1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தலைவர் என்பவர் எந்த ஒரு

அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும் சஜித் ஒரு பொறுப்பற்ற நபர் என்பது உறுதியாகின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடு இன்னல்களுக்கு முகம் கொடுத்த போது நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைந்த குழுவுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு வந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படும் அணியுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் வலியுறுத்தினார். 

எதிர்கட்சித் தலைவராக சஜித் செய்தது அநுரகுமாரவை பலப்படுத்தியது எனவும் அதனால் தான் மக்கள் தற்போது ஐ.ம.சக்தி AKD யின் ஆக்சிஜன் என அழைக்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஜனாதிபதியை மிகவும் அன்புடன் வரவேற்றனர்.

இதன்போது 'ஐந்து அம்ச' இளைஞர் பிரேரணை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி