1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இராஜாங்க அமைச்சர்களாக பதவி

வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 பேர் அந்தப் பதவிகளை விட்டு விலகத் தயாராகி வருவதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அந்த ராஜாங்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இராஜாங்க  அமைச்சர்கள் டி. வி சானக, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்க்ஷ அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத். (இவர்களில் நால்வர் ஏலவே பதவி விலக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது)
 
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறையல்ல என அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
எவ்வாறாயினும், அந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிய வந்துள்ளது
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி