1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி

வேட்பாளர் திலித் ஜயவீர நுவரெலியாவில் நேற்று (07) இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில் கலந்து கொண்டதன் காரணமாக காணொளி தொழில்நுட்பம் மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
 
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவிக்கையில்,
 
"வரலாறு முழுவதும், அந்த வாக்குறுதிகள் நிறைந்த அந்த அரசியல் மேடை, உங்களின் இந்த கசப்பான வாழ்க்கையை மட்டுமே உங்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. இதை மாற்ற விரும்புகிறோம். அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்து இருகின்றோம்.உங்கள் வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்தது 100,000 ரூபாவாக இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியின் ஊடக முன்வைத்துள்ளோம். 
 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2000 ரூபாயாக மாற்றுவது ஒன்றும் கடினம் அல்ல. ஆனால் அது அறிவியல் பூர்வமாக செய்யப்பட வேண்டும்.
பெருந்தோட்ட கம்பனிகளிடம் மட்டும் கட்டணத்தை வசூலித்து இந்தத் தொகையைப் பெற முடியாது என்று நினைக்கிறேன். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது.” என்று அவரை தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி