1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்த வருடத்தின் கடந்த சில

மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (08) வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
 
கடற்படையினரால் சுமார் 385 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 9,631 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
மேலும், அந்தக் காலப் பகுதியில் கேரள கஞ்சா, ஹாஷிஸ், போதை மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்களையும் கடற்படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
 
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 162 பேரும், 11 படகுகளும் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி