1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரணில் விக்கிரமசிங்க, நீங்கள்

அசிங்கமான வகையில் அரசியலில்  இனவாதத்தை விதைக்க முயற்சிசெய்ய வேண்டாம்.

இலங்கையில் இதுவரைகாலமும் இருபக்கத்துக்கும் பரிமாறிக் கொண்டிருந்த அரசியல் அதிகாரம் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி முற்றுப்பெறுவது நிச்சயமாகிவிட்டது. இதன்காரணமாக பகைவர்கள் அனைவரும் அரசியல் வாதங்களுக்குப் பதிலாக பொய்யான குறைகூறல்கள், திரிபுபடுத்தல்களை பாரியளவில் பிரசசாரம்செய்த வருகிறார்கள். 
 
கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தின் 25 வது வருடாந்த மாநாடு - மாளிகாவத்த பி.டீ. சிறிசேன விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
 
நான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறுகிறேன் "ரணில் விக்கிரமசிங்க, நீங்கள் அசிங்கமான வகையில் அரசியலில் இனவாதத்தை விதைக்க முயற்சி செய்ய வேண்டாம்." என்றாலும் தான் அதற்கு பதிலளிக்க முன்னராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சரியான பதிலை அளித்துள்ளமை தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வடக்கிற்குச் சென்று இனவாதத்தை தூண்டிவிட ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சியை வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சுமந்திரனே நிராகரித்துள்ளார், இப்போது ரணில் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள். 
 
நாட்டில் மற்றவருக்கு எதிராக இனவாதத்தை விதைத்திட, ஒருவருக்கொருவர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த மேற்கொள்கின்ற முயற்சிகள் இப்போது செல்லுபடியாக மாட்டாது.
 
எனினும் ரணில் விக்கிரமசிங்கவினர் இப்போதும் பழைய கடையிலேயே பொருட்களை வாங்குகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாக பல சந்தர்ப்பங்களில் "எனது நண்பர் அநுர, எனது கூட்டாளி அநுர" எனக் கூறியிருக்கிறார். அது "சேப்" ஆக்க வருவதாகும். 
 
ரணில் விக்கிரமசிங்க உங்களால் எங்களுடன் 'ஷேப்" ஆக முடியாது. மத்திய வங்கி மோசடி பற்றிய விசாரணைகளை மேற்கொள்வோம். காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்த விதத்தை விசாரிப்போம்.
 
அதனைப் போலவே மோசடிக்காரர்கள், ஊழல் பேர்வழிகளை பாதுகாத்த விதம்பற்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும். அதேவேளையில் மென்மேலும் குறைகூறல்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் 22 ஆம் திகதி கலவரங்கள் இடம்பெறும் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
 
*தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்த பின்னர் வெற்றியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக் கொடுப்போம்.*
 
வெற்றி பெற்றதும் தோல்வி கண்டவர்களை துன்புறுத்தும் வரலாறு அவர்களுக்கே உள்ளது. . அன்று தோ்தல் வெற்றியின் பின்னர் இரண்டு வாரங்கள் பொலிஸாரை பொலிஸ் நிலையங்களில் முடக்கி வைத்து எதிர்கட்சியினர் மீது தாக்குதல் நடத்த, வீடுகளை தீக்கிரையாக்க, துப்பாக்கி பிரயோகம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 
 
எனினும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்த பின்னர் வெற்றியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம். செப்டெம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு கட்சியையும் சோ்ந்த ஆதரவாளர்களை சந்தித்து மாற்றமடையுமாறு அழைப்பு விடுப்போம். ஆனாலும் மாற்றமடைய விரும்பாவிட்டால் அவர்கள் விரும்பிய அரசியல் இயக்கத்தின் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை இருக்கிறது. அது ஒரு ஜனநாயக உரிமையாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை கட்சிகளாக பிரிந்து நாங்கள் உழைப்போம். 
 
எனினும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எமக்கு வாக்களிக்காதவர்களையும் சோ்த்துக் கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதனால் வெற்றிக்கு பின்னர் ஏனைய கட்சியைச் சோ்ந்தவர்களுக்கு நகத்தின் நுனியினால் கூட சேதம் விளைவிக்க தேசிய மக்கள் சக்தி இடமளிக்கமாட்டாது என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி