1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர்தாக்கல் செய்த முறைப்பாடு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போது, பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரினார்.
 
அதன்படி, நவம்பர் 29ஆம் திகதிக்கு முன் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
அத்துடன், பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர, வழக்கு விசாரணை தினத்தன்று நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி