1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பம்பலப்பிட்டியில் 10 கோடி ரூபா

பெறுமதியான சொகுசு வீடு ஒன்று கலபொடஅத்தே ஞானசார தேரரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக 

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று (12 ) தெரிய வந்துள்ளது .
 
சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை உடனடியாக விடுவிக்குமாறும்  அவ்வாறு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக வழக்குத் தொடரப்படும் என்றும் கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கும் கொழும்பு மேலதிக நீதிவான் ரத் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார் .
 
பம்பலப்பிட்டி மற்றும் ஏகல ஆகிய இடங்களைச் சேர்ந்த இனோகா சந்திம சேனாநாயக்க என்பவர் முதன்மை நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கிலேயே மேலதிக நீதிவான் இந்தஉத்தரவை பிறப்பித்தார்.
 
ராஜகிரிய , நாவல வீதி , ஸ்ரீ சதர்ம ராஜித விஹாரையைச் சேர்ந்த கலபொடஅத்தே ஞானசார தேரர்,  அவரது சீடர் எனக் கூறப்படும் தயாசிஹ தேரர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி