1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொதுமக்கள் சுதந்திரமான,

நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே எதிர்பார்க்கிறார்கள் என

இளைப்பாறிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன தெரிவித்தார்
 
தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
 
கடந்த 30 ஆம் திகதிவரை எமக்கு பதிவாகிய தோ்தல் வன்செயல்கள் மற்றும் சட்டமீறல்கள் சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்தின் தோ்தல் தொழிற்பாடுகள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருக்கிறோம். 
 
அந்த முறைப்பாடுகள் பற்றி ஆக்கமுறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். 
 
மக்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே. அரசியல் இயக்கமென்ற வகையில் நாங்களும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல் இயக்கத்திற்காக முழுமையாக எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
 
 எனினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு வன்முறை செயல்கள் புரியப்படுவது பதிவாகியுள்ளது.
 
 கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று இவ்வாறு அச்சுறுத்தியிருக்கிறார்கள். ராஜகிரியவிலும் மருதானையிலும் இரண்டு அச்சகங்களில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை இலக்காகக் கொண்டு சேறுபூசும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு வருவதா பதிவாகியது. அது சம்பந்தமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். 
 
தேசிய மக்கள் சக்தியை சோ்ந்தவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தோ்தல்கள் செயலகத்துக்கும் பொலிஸுக்கும் வழங்கப்படுகிறது. 
 
சுதந்திரமான, நீதியான மற்றும் அமைதியான தோ்தலை நடத்துவதே எம்மனைவரின் எதிர்பார்ப்பாகும். தோ்தல்கள் ஆணைக்குழு அந்த எதிர்பார்ப்பினை ஈடேற்றுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி