1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டின் வறுமையை போக்குவதற்கு

ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் அடித்தளம் இடுவோம். ஜனசவிய, அஸ்வெசும, கெமிதிரிய, சமூர்த்தி போன்ற வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கி குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வறுமையை 24 மாதங்களுக்குள் ஒழிப்பதற்காக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்குவோம்.

இதற்கு மேலதிகமாக நிதி வழங்கி புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். இந்த சந்தர்ப்பத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்கும் சேவையை கௌரவமாக கருதுவோம். இந்த திட்டத்தை பலமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
இந்த சமூர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக கொவிட் காலத்தில் அரசாங்கத்திற்கு கடன் பெறவும் முடியுமாக இருந்தது. தற்போதைய அரசாங்கம் அந்த கடனை செலுத்துவும் இல்லை. கடனுக்கான வட்டியைச் செலுத்துவும் இல்லை. அரசாங்கம் 43 பில்லியன் ரூபா கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
கொழும்பில் இன்று(13) நடைபெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
சமூர்த்தி வேலைத்திட்டத்தை எவரேனும் வீழ்த்துவதற்கு முயற்சி செய்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு குறைபாடுகள் காணப்படுகின்றன. அவர்களின் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வினை பெற்றுக் கொடுத்திருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
பதவி உயர்வு குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம். சமூர்த்தி கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டவர்களுக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
 
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் பணம் வழங்கும் வேலைத்திட்டம் அல்ல. இதன் ஊடாக வரியவர்களை வறுமையிலிருந்து மீட்கின்ற வேலைத்திட்டமாகும். அதற்காக சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி