1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சில வினாக்கள் சமூக வலைத்தளங்களில்

வெளியான நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாகம் 1 இல் 3 வினாக்களை நீக்க பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் பாகத்தில் உள்ள மூன்று வினாக்களைப் போன்று மூன்று கேள்விகளை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் மாதிரித் தாள் மூலம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
அதன்படி இன்று புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டு அது தொடர்பான மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
 
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை (18) புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி