1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தற்போது நாட்டு மக்கள் தெளிவான

தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பார்கள். ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயக்கவும் அரசியல் ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக ஒரு பக்கமாக இருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்திதான் பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளது. டீல் செய்கின்ற அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் பக்கம் செல்வதா? அல்லது வெளிப்படையாக நின்று போராடி பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கின்றவர்களின் பக்கம் இருப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். 

 
மக்களை கைவிட்டு விட்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அரசியல் டீல் செய்து கொள்கின்ற கலாச்சாரத்தை நிராகரித்து, பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குகின்ற சமூக டீல் ஒன்றுக்கே சென்றுள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
நீர்கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டதைப் போன்ற செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். முத்துராஜாவெல காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வந்தபோது அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய சட்டத்தரணிகள் குழுவுக்கு முடியுமாக இருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கூறிய போதிலும் இதுவரையும் போதுமான அளவு நட்டஈடு கிடைக்கப்பெறவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த அனைத்து மீனவர்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக் கொணர்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஐக்கிய மக்கள் சக்தி முதல் தடவையாக ஒரு குழுவாக இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன் வைத்துள்ளது. 
 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசாரணையாளர்களையும் இணைத்துக் கொண்டு இதன் உண்மையை வெளிப்படுத்துவோம். விசேட நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி விசாரணை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இவற்றை எழுத்து மூலமாக வழங்கி இருக்கிறோம். இவை ஹன்சாட்டில் பதியப்பட்டிருக்கின்றது. அரசியல் இலாபங்களை பெற்றுக்கொண்டு பொய்களை உருவாக்குகின்றவர்கள் இருந்தாலும் நாம் அவ்வாறான பொய்களை சொல்கின்றவர்கள் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி