1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யுக்திய நடவடிக்கையின்போது

கைது செய்யப்பட வேண்டிய நபர் என்று தவறாகக் கருதி,வீதியில் வைத்து  வழக்கறிஞர் ஒருவரின் சாரதியை கைவிலங்கிட்டமை தொடர்பான வழக்கு விசாரடை  இன்று (03) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது மனுதாரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை பொலிஸ் அதிகாரிகள் கோரினர்.

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த செல்வராஜ் ராஜபாண்டி என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த மன்னிப்பு கோரப்பட்டது.
 
பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இந்த சம்பவத்துக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்க, பிரேமரத்ன பொலிஸ் கான்ஸ்டபிள்களான ரத்னசிறி, சேனாதிரா மற்றும் நாணயக்கார ஆகியோர் மன்னிப்பு கோரினர்.
 
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்திலிருந்து வாகனத்தில் திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடையில் வந்த சிலர் வீதிக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
 
அப்போது மனுதாரர், "நாங்கள் பொலிஸில் இருந்து வருகிறோம்" என்று கூறிய சிவில் உடை அணிந்த குழுவினர் தனக்கு  கைவிலங்கிட்டு, வலது கையில் பச்சை குத்தப்பட்டுள்ளதா என்று சோதித்ததாகக் கூறினார்.
 
அவர் கையில் பச்சை குத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னர், "அவரல்ல... தவறு" என்று கூறிவிட்டு அவர்கள் சென்றதாகவும் மனுதாரர் கூறினார்.
 
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இந்த அதிகாரிகள் நீர்கொழும்பு பொலிஸில் கடமையாற்றியவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அதன் பிரகாரம் இந்த அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி