1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தான் இராஜாங்க அமைச்சராக

இருந்தபோது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட வாகனம் மிகவும் பழுதடைந்திருந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தெரிவித்துள்ளார்.

தான் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு குறுக்கீடுகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தனக்குக் கொடுக்கப்பட்ட வாகனங்கள் கூட அடிக்கடி பழுதடைவதாகவும், சில வாகனங்களிலிருந்து எண்ணெய் கசிந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பழுதடைந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கராஜ்களில் நிறுத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தாயிரம் ரூபாய் செலவில் திருத்தக்கூடிய  வாகனத்துக்கு பத்து லட்சம் ரூபா பில் போடப்பட்டதற்கா ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், தான் ஜனாதிபதியின் ஆலோசகராக பணியாற்றவில்லை எனவும், இராஜாங்க அமைச்சர் பதவியை வகிக்கும்போது அமைச்சு வாகனம் வழங்காத காரணத்தினால் குறித்த வாகனம் ஜனாதிபதி அலுவலகத்தினால் தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி