1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகஸ்ட் 27 ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன இளம் குற்றவாளிகளுடன் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று(13) இரவு தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இது தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக.

கொரோனா வைரஸ் பரவுவதால், சிறைவாசம் அனுபவிக்கும் அனைத்து கைதிகளும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப் படுத்தும் மையத்திற்கு அனுப்பப்படுவார்கள், மேலும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும், அவர்கள் சிறைக்கு மாற்றப்படுவார்கள்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்த அனுப்பப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று இரவு கைது செய்யப்பட்டு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வேன்களில் மக்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரை  கடந்த டிசம்பர் 3௦ ம் திகதி பிணையில் விடுவிக்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், பிணையை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று (மே 13) ரத்துச் செய்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி