1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2025ஆம் ஆண்டுக்கான 305 வகை

மருந்துகளை உள்ளுர் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக சுகாதார அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சரவையில் சமர்ப்பித்த மகஜர் இரண்டாவது தடவையாக நிராகரிக்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர திஸாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் (08) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றபோது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்துகளுக்கு இதுவரை உள்ளுர் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட முறைகளை மாற்றி புதிய முறையின் மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.

புதிய வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதிலும் எட்டு சதவீத விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்துகளை வழங்குமாறு உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை மொத்தமாக ஓடர்களை வழங்காத காரணத்தினால் ஜனவரி மாதத்துக்குள் மருந்துகளை விநியோகிக்க முடியாது என உற்பத்தியாளர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். மருந்து உற்பத்திக்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆவதே இதற்குக் காரணம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி