1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் பொதுத் தேர்தலில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ போட்டியிடமாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதேபோன்று முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்க்ஷவும் பொதுத் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது பெயர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகக்ஷ இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியலில் இடம்பெறவில்லை.
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தனது ஆதரவை வழங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தீர்மானித்துள்ளார்.
 
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷசீந்திர ராஜபக்க்ஷவும் நிபுணர் ரணவக்க ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசமும் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
 
இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மௌபிம ஜனதா கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி