1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஹம்தி என்ற சிறுவன் சத்திரசிகிச்சை

மேற்கொண்ட விசேட வைத்திய நிபுணரை சந்தேக நபராகப் பெயரிட்டு உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று (09) உத்தரவிட்டுள்ளார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர சிறுமி  ஒருவர் உயிரிழந்த  விடயத்தில் குற்றம் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
சிறுமியின் பிரேத பரிசோதனை விசாரணையில் சாட்சியமாக குறிப்பிடப்பட்டுள்ள சத்திர சிகிச்சை நிபுணர் நவின் விஜேகோன், சாட்சியமளிப் பதனைத் தவிர்த்து வெளிநாட்டில் வாழ்வதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த உண்மைகளைப் பரிசீலித்த நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோரின்  இரண்டு வயதுடைய ஹம்தி என்ற சிறுவன் டிசம்பர் 22ஆம் திகதி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 6 மாதங்களின் பின்னர் வலது சிறுநீரகம் இன்றி உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
 
பிரேத பரிசோதனை மருத்துவரின் சாட்சியங்களை ஆராய்வதற்காக நேற்று முறைப்பாடு கோரப்பட்டது.
 
சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு பொறுப்பான நிபுணத்துவ சத்திரசிகிச்சை நிபுணர் நவீன் விஜயகோனின் சாட்சியம் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக அழைக்கப்படவிருந்த போதிலும், அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் அவர் இது தொடர்பில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 
 
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உண்மைகளை முன்வைத்து சாட்சியமாக குறிப்பிடப்பட்டுள்ள நிபுணத்துவ வைத்தியர் சாட்சியமளிப்பதைத் தவிர்த்து வருவதாகத் தெரிகிறது
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி