1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக சட்டத்தரணி எம்.ஆர்.வை.கே உடவெல ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (10)  தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
உடவெல இதற்கு முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக (சட்டப் பிரிவு) கடமையாற்றினார்.
 
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய கனிஷ்க விஜேரத்ன கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அந்த பதவியில் இருந்து விலகினார்.
 
விஜேரத்னவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமித்தமை அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முரணானது என ஊடகவியலாளர் ஒருவரும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமொன்றும் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி