1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மியான்மரின் மியாவாடி

பகுதியில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு உதவி வழங்குமாறு தாய்லாந்து அரசாங்கத்திடம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

தாய்லாந்து தூதுவர் பேட்டூன் மஹாபண்ணபொன் மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இதற்கு முன்னர் சைபர் கிரைம் மையங்களில் இருந்து 28 இலங்கையர்களை மீட்க தாய்லாந்து அரசு உதவி வழங்கியது.
 
இதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்ததார..
 
மியான்மர் அரசாங்கம் மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) மூலம் வசதியளிக்கப்பட்ட மையங்களில் 40 இலங்கையர்கள் இன்னும் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை மிஸ் ஹரிணி அமரசூரிய கோரியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 
ஹரிணி பிரதமராக பதவியேற்றதற்கு தூதுவர் பேட்டூன் மஹாபண்ணபொன் வாழ்த்து தெரிவித்தார்.
 
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், நவீன விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற ஆராய்ச்சித் துறைகளில் ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் வடமேற்கு பல்கலைக்கழக விவசாய பீடங்களின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி