1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்

மனிதக் கொலைப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன உள்ளிட்ட சிலருக்கு எதிராக பி அறிக்கை தாக்கல் செய்ய சதித்திட்டம் தீட்டியமை மற்றும் பெண்ணொருவரின் பின்பகுதி வீடியோ பதிவு தொடர்பில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு விசாரணைகள் காரணமாகவே அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த வாரம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு எதிராக, இணையத்தள பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சில பிழைகளை மேற்கோள் காட்டி இந்துக சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அத்துடன், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் தரிந்து ஜயவர்தனவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.
 
இதன்படி, நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்து தம்மை கைது செய்யும் முயற்சி தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (11) முறைப்பாடு செய்துள்ளார்.
 
எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்தாலோசிக்காமல் தரிந்து ஜயவர்தனவுக்கு எதிராக சில விடயங்களை தெரிவித்து இந்துல சில்வா நீதிவான் நீதிமன்றில் உத்தரவு  ஒன்றைக் கோரியுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி