1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தப் படுமோசமான உக்கிப்போன,

அருவருப்பான அரசியலுக்குப் பதிலாக பரிசுத்தமான ஒரு ஆட்சியை அமைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலை வென்றெடுத்து சிறியதொரு காலப் பகுதியின் பின் நாங்கள் பாராளுமன்றத்தைக் கலைத்து எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை பரிசுத்தப்படுத்துகின்ற செயற்பொறுப்பினை இந்த நாட்டு மக்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறோம் என வெற்றிக்கான தங்காலைக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஆனால், மக்கள் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கு முன்னர் ஒருசிலர் தன்னிச்சையாகவே சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தானே? குறிப்பாக அம்பாந்தோட்டையில் 88 வருடங்களுக்குப் பின்னர் வாக்குச் சீட்டிலே பெயர் கிடையாது.
 IMG 20241020 110325 800 x 533 pixel
 
உண்மையிலேயே சரியாக கணக்கு வழக்குகளை தயாரித்துக்கொள்ள முடியாவிட்டாலும் நாங்கள் குத்துமதிப்பாகப் பார்த்தால் 60 இற்கு மேற்பட்டவர்கள் தன்னிச்சையாகவே தம்மை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 
 
எஞ்சிய பணியை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாட்டு மக்கள் சரியாகவே ஈடேற்றுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியை உறுதியான வெற்றியாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பலம்பொருந்திய பாராளுமன்றமொன்றை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அம்பாந்தோட்டை நிலைமை எப்படி என்பது தெட்டத்தெளிவாகிறது.
 
 சதாகாலமும் எங்களுக்கு பல வெற்றிகளை இந்த அம்பாந்தோட்டை மாவட்டமே கொண்டுவந்தது. மிகவும் சிரம்மான சந்தர்ப்பங்களில் எமது அரசியல் கொடியை உயர்த்திப்பிடித்துக்கொண்டு முன்னோக்கி நகர பாரிய பங்களிப்பைச் செய்தவர்கள் அம்பாந்தோட்டை மக்களே! எனவே, இந்த அம்பாந்தோட்டை மாவட்டத்திலே சந்தேகமேயின்றி நாங்கள் உறுதியான பலத்தை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. 
 
நாங்கள் ஒவ்வொன்றாக, படிப்படியாக எனினும் உறுதியாக பலம்பொருந்திய வகையில் நிச்சயமாக இந்த நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்வோம். அதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
 
ஒரு புறத்திலே எங்களை பதற்றமடையச் செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. நாங்கள் பதற்றப்பட மாட்டோம். எமது நாட்டுக்கு முதன்முதலில் ஒரு புதிய அரசியல் கலாசாரம் தேவை. அந்தப் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குகையில் பிரதானமான அர்ப்பணிப்பு எங்களிடமே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ற வகையில் அரசாங்கத்தின் தலைவர்கள் என்ற வகையில் சாதகமான ஓர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பை நாங்கள் வெளிக்காட்ட வேண்டும். 
 
வெற்றி என்றால் என்ன என்பதை ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நாங்கள் மக்களுக்கு நிரூபித்திருக்கிறோம். 
 
வெற்றியை எப்படிக் கொண்டாடுவது என்பதை நிரூபித்திருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் உங்களுக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்கு நேரொத்த வகையில் நீங்கள் அந்த வெற்றியை மிகவும் அமைதியாக ஒரு பட்டாசு கூட கொளுத்தாமல் பிறருக்கு எந்தவிதமான இடையூறும் விளைவிக்காமல் வெற்றியை கொண்டாடுகின்ற வித்த்தை இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். 
 
அதுமாத்திரமல்ல, தற்போது தேர்தல் இயக்கமொன்று சூடுபிடித்துள்ளது. முன்பெல்லாம் பொதுத்தேர்தல் என்றால் எப்படி? ஒருவருக்கொருவர் எதிராக தாக்குதலை நடாத்துகின்ற, அலுவலகங்களில் தீ மூட்டுகின்ற, மோதல்கள் உருவாகின்ற சில வேளைகளில் அச்சத்துடன் தேர்தலில் ஈடுபடுகின்ற நிலையே காணப்பட்டது. குறிப்பாக இந்த மாவட்டத்தில் அப்படித்தான். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தற்போது தேர்தல் இயக்கமொன்றை, தேர்தல் காலமொன்றை ஜனநாயக ரீதியாக அமைதிவழியில் எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது பற்றி இந்நாட்டு மக்களுக்கு புதிய அனுபவமொன்றை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இன்று பொதுவான பணிகள் எல்லாமே வழமைபோல் நடைபெற்று வருகின்றன.
 
தேர்தலொன்று நடைபெறப் போகிறதா என்பதை கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அமைதி நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எங்களுக்குத் தேவை அப்படிப்பட்ட ஒரு நாடுதான். 
 
இது அரசியல் கலாச்சாரத்தைப் பொறுத்தமட்டில் பாரிய சீரழிவுக்கு உள்ளாகிய ஒரு நாடாகும். நாங்கள் மீண்டும் ஜனநாயகத்தையும் அமைதியையும் பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொடுத்து தாம் விரும்பிய அரசியல் இயக்கத்திற்காக உழைப்பதற்கான உரிமையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதல் தடவையாக இந்த நாட்டில் நிலை நாட்டியிருக்கிறது என்றார்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி