1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 



களனி விகாரையின் நிர்வாகக் குழுவின் தலைவர் பதவி ரணிலுக்கு இல்லாமல் போகுமாயின், சமூகவியலாளர்கள் மற்றும் மானுடவியலாளர்களுக்கு

புதிய சப்ஜக்ட் ஒன்றை ஆராய்ச்சி செய்ய வேண்டி ஏற்படும் என “கலம்பு டெலிகிராப்” ஆசிரியர் உச்சிந்து குருகுலசூரிய தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

களனி விகாரையின் நிர்வாக சபையிலிருந்து ரணில் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து வெளிவந்த செய்திகள் தொடர்பில் இவ்வாறு கூறும் கலம்பு டெலிகிராப் ஆசிரியர் தனது குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

“களனி வீழ்ந்த போது இலங்கையும் வீழ்ந்தது. களனி எழுந்து நின்ற போது இலங்கையும் எழுந்து நின்றது”
களனி மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தலைமுறைக்கிடையில் இருந்த தொடர்புகள் வீழ்ச்சியடைந்துள்ளன. 1575ம் ஆண்டில் போர்த்துகேயர்களால் சேதமாக்கப்பட்ட களனி விகாரையினை மறுசீரமைப்புச் செய்தது ஹெலேனா விஜேவர்தனவாகும். ஹெலேனாவின் மகள் எக்னஸின் மகன் ஜே. ஆரின் மூத்த பேரனாவார். ஹெலேனாவின்  மகன் தொன் ரிச்சர்ட் விஜேவர்தன ஊடாக ரணில் அவளது பேரனாகும். டீ. ஆர். விஜேவர்தன (தொன் ரிச்சட்) லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகராவார்.

ஹெலோனாவின் மற்றொரு மகனான தொன் சார்ள்ஸினால் எழுதப்பட்ட  Revolt in the Temple என்ற 700 பக்கங்களைக் கொண்ட நூலின் மூலம் களனி விகாரைக்கும் சிங்கள இனத்திற்கும்

2500 வருட வரலாறு முறையற்ற வகையில் ஒதுக்கப்பட்டுள்ளதோடு களனி விகாரையினை புனரமைப்புச் செய்து அதன் நிர்வாகிகளாக இருந்த விஜேவர்தன குடும்பத்திற்கு முறையற்ற வகையில் அவை இரண்டும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

இது வெற்றுக் கதையல்ல. விஜய - தேவனம் பியதிஸ்ஸவின் இளைய சகோதரர் மஹாநாம, யத்பல திஸ்ஸ, காவன் திஸ்ஸ, அவரது மனைவி விகாரமஹாதேவி வரையில் வந்து ஹெலேனா, விமலா விஜேவர்தன மற்றும் ஜயவர்தன, விக்ரமசிங்க வரையில் நீண்டு செல்லும் கதையாகும்.  பின்னர் கொழும்புக்கு மாற்றமாகிய போதும் விஜேவர்தனக்கள், ஜயவர்தனக்களிலிருந்து ரணில் வரைக்கும் அரசியலை ஆரம்பித்தது களனியிலாகும். 1947 ஜனவரி 06ம் திகதி ரணிலின் பாட்டன்மார் இணைந்து இலங்கையின் சுதந்திரம் தொடர்பான வெளிப்பாட்டை சங்கத்தினரைக் கொண்டு வெளியிட்டதும் களனி விகாரையிலாகும்.

மற்றொரு இது தொடர்பான ஆய்வு Jonathan S.Walters ன் - History of Kelaniya (களனியின் வரலாறு) என்ற புத்தகத்தில் உள்ளது. ராஜன்  ஹூல் ஜெனாதனை மேற்கோள் காட்டி கூறும் வகையில் , நாட்டின் தலைவிதி மற்றும் களனி விகாரையின் நிர்வாகத்தினரின் தலைவிதி ஒன்றாகப் பிணைந்து இடம்பெற்றிருப்பது இதிலாகும். “களனி வீழ்ந்த போது இலங்கையும் வீழ்ந்தது. களனி எழுந்து நிற்கும் போது இலங்கையும் எழுந்து நின்றது”. எனினும் என்னால்  Revolt in the Temple என்ற புத்தகத்தில் அந்த வாக்கியத்தைக் கண்டுபிடிக்க முடியாது போனது.

எனினும் களனி விகாரையின் நிர்வாக சபைத் தலைவர் பதவி ரணிலுக்கு இல்லாமல் போகுமாயின், சமூகவியலாளர்களுக்கும், மானுடவியலாளர்களுக்கும் புதிய சப்ஜக்ட் ஒன்றை ஆராய்ச்சி செய்ய வேண்டியேற்படும். அதேபோன்று சம்பிக்கவின் ஆட்கள் என்னிடம் கூறியது, அவர்களுக்கு மஹிந்தவுடனும், ரணிலுடனும் உறவைப் பேணி பெற்றுள்ள அனுபவங்களுக்கு அமைய உண்மையான பௌத்தன் ரணில் என்றாகும். அப்போது நான் சொன்னேன், அப்படியாயின் அவர்கள் இருவரும் திருப்பதி போவார்கள்தானே என்று. அவர்கள் சிரித்துக் கொண்டு சும்மா இருந்தார்கள்.

சொத்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள விகாராதிபதி

களனி ரஜமகா விகாரையின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டதாக வெளியான செய்திகள் மற்றும் சமூக வளைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் தெளிவை வழங்கிய ஐக்கிய தேசிய கட்சி, களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது சுமத்தப்பட்டிருக்கும் சொத்துக் குற்றச்சாட்டு தொடர்பில் விடுதலையாகும் வரையில் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னர் அறிவித்திருந்ததாகக் கூறியுள்ளது.

களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பொறுப்புக்கள் தொடர்பில் நிர்வாக சபையின் தலைவர் என்ற வகையில் பிரதமரால்  பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாததன் காரணமாக இந்த அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டதாக ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது. 

சொத்துக்கள் தொடர்பில் களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்திலிருந்தும் விடுபதுவது கண்டிப்பான ஒன்று என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே தெளிவாகவே அறிவித்திருந்ததாகவும் ஐக்கிய தேசிய கட்சி மேலும் கூறியுள்ளது. 

யாருக்கு வெட்கம்?

களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்கரக்பித்த தேரரின் தலைமையில் நேற்று இடம்பெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக வெளியான செய்தி தொடர்பில் குறிப்பிட்ட தாரக நாணயக்கார இவ்வாறு கூறினார்.
“தனது தனி பலத்தினால் சரிவடைந்து போயிருந்த களனி விகாரையினை மீளக் கட்டியெழுப்பிய ஹெலேனா விஜேவர்தனவின் பேரன் ரணில் விக்ரமசிங்கவாகும். களனி விகாரையின் நிர்வாக சபையிலிருந்து அவரை நீக்கினால் வெட்கம் களனி விகாரையுடன் தொடர்பானவர்களுக்கே தவிற ரணில் விக்ரமசிங்கவுக்கு அல்ல என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி