1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்

மூலம் இன்று (16) விண்ணில் செலுத்தப்பட்ட புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்தியாவின. இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இப்போது அந்த செயற்கைக்கோள் அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளன. தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இஓஎஸ்-08 செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படும். இதற்கான உழைப்பைச் செலுத்திய எஸ்எஸ்எல்வி டி-3 குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் இது மூன்றாவது உந்து வாகனம், இன்றைய வெற்றி மூலம் எஸ்எஸ்எல்வி வளர்ச்சி நிறைவுபெற்றது என்று அறிவிக்கலாம்.” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி