1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன

பெரமுனவின் 69 இலட்சம் வாக்காளர்களில் சுமார் 19 இலட்சம் பேர் குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி, எஞ்சிய 50 இலட்சத்தில் எத்தனை பேர் வேறு கட்சிகளுக்கு தாவினாலும் அதிகபட்சமாக 10 இலட்சம் பேரரே குறைவடைவார்கள் எனவும், 40 இலட்சம் பேர் நாமல் ராஜபக்க்ஷவிடம் இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 21 இலட்சமும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 23 இலட்சமும் சஜித் பிரேமதாசவுக்கு 37 இலட்சமும் கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 40 இலட்சம் வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ள ஒரே வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி