1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம்

ஆகியோர் ஜனாதிபதி ரணிலுடன் வரக்கூடிய சாத்தியமான கூட்டாளிகளின் பட்டியலில் மிக முக்கியமான அரசியல்வாதிகளாக இருந்தனர்.

எவ்வாறாயினும், அரசாங்கத் தரப்பிலிருந்து அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது, ​​ஹக்கீம் கட்சியின் உயர்பீட சபையை விரைவாகக் கூட்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தார்.

அதேபோன்று ரிஷாத் ஒரு வாரத்துக்கு முன்னர் தனது கட்சியின் அதியுயர் உயர்பீடக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவான நிலையில், பல பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்தனர்.

இதுவே  இறுதி முடிவெடுப்பதற்கு உயர் பீடத்தை  கூட்டுவதற்கு முன்னர் கட்சி உறுப்பினர்களுடன் மேலும் ஆலோசனை செய்ய ரிஷாத்தை தூண்டியது.

இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளது சிங்கள ஊடகம் ஒன்று. இது தொடர்பில் அந்த ஊடகம் மேலும் தெரிவிக்கையில்

தனது கட்சியின் முடிவை அறிவிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் எடுத்துக் கொண்டபோது, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தி அரசாங்கத்தின் கடுமையான அழுத்தங்களை ரிஷாத் பதியுதீன் எதிர்கொண்டார்.

கட்சியின் மற்றுமொரு முக்கிய பிரமுகரான எம்.பி அமீர் அலிக்கு ஜனாதிபதியின் தரப்பில் இருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்தன. அழுத்தம் அதிகமாக இருந்ததால் இடைவிடாத கோரிக்கைகளிலிருந்து தப்பிக்க ரிஷாத் மற்றும் அமீர் இறுதியில் தங்கள்  கைத்தொலைபேசிகளை அணைத்தனர்.

இதேவேளை, தமது கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள ஏழு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த ரிஷாத், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடினார். சில இடங்களில் Zoom தொழில்நுட்பம் மூலம் கட்சிப் பிரதிநிதிகளுடனும்  கலந்துரையாடினார்.

அடிமட்ட முஸ்லிம்கள் சஜித்துடன் இருப்பதாகவும் எனவே சஜித்துக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானிக்க வேண்டும் எனவும் இங்கு கருத்து தெரிவித்திருந்ததனை அனைவரும் ரிஷாத்திடம்  கூறினர்.

இந்நிலையில், கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர. ரிஷாத் கடந்த புதன்கிழமை கொழும்பு வந்துள்ளார். அதே நேரத்தில் ஜனாதிபதியிடமிருந்து ரிஷாத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அரை மணித்தியாலம் இடம்பெற்ற இந்தத் தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் ஆதரவை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி றிஷாத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார். இதன்போது களமட்ட நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரிஷாத் விளக்கமளிக்கமளித்தார்.

ஜனாதிபதி, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது நாம் எடுக்க வேண்டிய முடிவானது செய்த உதவியின் அடிப்படையில் எடுக்கக்கூடிய முடிவு அல்ல.

நம்மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. எமது மக்கள் என்ன கூறினார்கள் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் அந்த இரண்டு வருடங்களில் எமது மக்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை.

அதெல்லாம் செத்து போய்விட்டது. குறைந்த பட்சம் ஐ.தே.க.வையாவது நீங்கள் மீட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் அதைக்கூட செய்யவில்லை. உங்களை கிராம மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை என ரிஷாத் கூறியபோது, ​​அதற்கான சில காரணங்களையும் ஜனாதிபதி றிஷாதிடம் விளக்கினார்.

ஆனால் ரிஷாத் அதே நிலையில் அசையாமல் இருந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தார் என அந்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி