1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த 48 மணி நேரத்தில் பெய்த

கனமழையால் 8,522 குடும்பங்களைச் சேர்ந்த 27,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இரத்தினபுரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அம்பாறை, காலி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (18) வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை வளிமண்டலவியல் நிபுணர் எச்சரித்துள்ளார்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் எஹலியகொடவில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி