1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்

கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறியதற்கான சரியான காரணத்தை விளக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரால் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் .ஹாரிஸுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இதன்படி  முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட அந்தஸ்திலிருந்து ஹரீஸ் எம்பி உடனடியாக நீக்கப்படுவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பிரதித் தலைவர் பதவியிலிருந்தும அவர்  தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
 
மேலும்  தன்னிலை விளக்கமளிப்பதற்காக அவருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின்  உயர்பீட ஆலோசனைக் கூட்டங்களில் ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி