2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்
பொதுத் தராதர உயர்தரப் பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.