1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் ஜனாதிபதிகளான

ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுக் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (26) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் கலந்துரையாடினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நிட்டம்புவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் அடுத்த பொதுத் தேர்தலில் பொதுக் கூட்டணியாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளதாக அசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த பொதுக் கூட்டமைப்பு தொடர்பில் இன்று (27) ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி