1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தனியார் வங்கி ஒன்றின்

ஆண்டு நிறைவுக்கு பரிசு தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த உக்ரைன் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்நாட்டில் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
 
விளம்பரத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல்கள் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும்.
 
இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு கும்பல் மோசடியாக பெறுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
 
இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், உனவட்டுன பிரதேசத்தில் இருந்து இந்த  மோசடி இடம்பெறுவதை கண்டுபிடித்துள்ளனர்.
 
அங்கு சென்ற விசாரணை அதிகாரிகள் அங்கு இருவரை கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட இருவரும் உக்ரைன் பிரஜைகள்  எனவும், இவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
சந்தேக நபர்கள் நேற்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி