1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

(பாறுக் ஷிஹான்)

வீடொன்றில் புதையல் தோண்டிய
குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு   கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த வெள்ளிக்கிழமை(27) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி பகுதியில் வீடு ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
சிலர் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
 
IMG 20240930 100524 800 x 533 pixel
 
கைதான ஐந்து சந்தேக நபர்களையும்   கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது  சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை(30) வரை   தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு   உத்தரவிட்டிருந்தார்.
 
குறித்த  சம்பவத்தில் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் நபர் உட்பட  அவரது நண்பர்கள்  புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி