1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

காத்தான்குடி பகுதி பாடசாலை

ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிள். விபத்தில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி சந்தை வீதி, தொகுதி 05 இல் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டுக்கு முன்னால் உள்ள சிறிய வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளுடன் தவறி கீழே வீழ்ந்ததில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி