அமைச்சர் ராஜிதத்த சேனாரத்ன தவிர்ந்த ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து அரசியல்
கட்சிகளின் தலைவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள் என 'ராவய' செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் ராஜிதத்த சேனாரத்ன தவிர்ந்த ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள் என 'ராவய' செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், பழனி திகாம்பரம், வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கட்சிகள் மாத்திரமல்லாது, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமயவும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.
இவர்களை தவிர அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும், சஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரச்சினை முடிவுக்கு வரும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா 'ராவய' பத்திரிகைக்கு மேலும் தெரிவித்துள்ளார்.