1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு மருதானைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவில் மிகவும் உயரமான

கோபுரமான தாமரைக் கோபுரம் மக்களின் பாவனைக்காக பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போதே உரையாற்றிய ஜனாதிபதி தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகளின் போது 200 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  தாமரைக் கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச , அவ்வாறு எவ்வித நிதி மோசடியும் இடம்பெறவில்லை என்றும் தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின்  தேசிய இலத்திரனியல் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி